திருநங்கைகளைக் கொச்சைப்படுத்துகிறதா ‘லட்சுமி பாம்’? - இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

‘லட்சுமி பாம்’ ட்ரெய்லர் திருநங்கைகளைக் கொச்சைப்படுத்துவது போல அமைந்திருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் பலரும் #BoycottLaxmmiBomb என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

2011-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த படம் 'காஞ்சனா'. தற்போது இந்தப் படம் 'லட்சுமி பாம்' என்கிற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடிக்க, லாரன்ஸ் இயக்கியுள்ளார்.

கரோனா நெருக்கடியால் தற்போது இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியீடாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் நவம்பர் 9 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆனால், இப்படத்தின் ட்ரெய்லர் திருநங்கைகளைக் கொச்சைப்படுத்துவது போல அமைந்திருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இன்னும் சிலரோ படத்தின் தலைப்பு இந்துக் கடவுளை அவமதிப்பதாகக் கூறி வருகின்றனர்.

மேலும் 'லட்சுமி பாம்' திரைப்படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறி #BoycottLaxmmiBomb என்ற ஹேஷ்டேகில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது.

இதற்குப் போட்டியாக அக்‌ஷய் குமார் ரசிகர்களும் #WeLoveUAkshayKumar என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE