விபத்தில் சிக்கிய ரன்வீர் சிங்கின் கார்: இணையத்தில் வைரலாகும் காணொலி

By ஐஏஎன்எஸ்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் ரன்வீர் சிங். இந்தியில் ‘பத்மாவத்’, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘சிம்பா’, ‘கல்லிபாய்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மும்பை பாந்த்ரா பகுதியில் நேற்று தனது சொகுசுக் காரில் ரன்வீர் சிங் சென்று கொண்டிருந்தார். அவரது காருக்குப் பின்னால் அதிவேகத்துடன் ஒரு மோட்டார் பைக் வந்து கொண்டிருந்தது. ரன்வீர் சிங்கின் காரை முந்திச் செல்லும் நோக்கில் வேகமாக முன்னேறிய அந்த பைக் ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து ரன்வீர் சிங்கின் காரில் பலமாக உராய்ந்தது. எனினும் பைக்கில் வந்த இளைஞர் நிற்காமல் வேகமாகச் சென்றுவிட்டார். இதில் ரன்வீர் காரின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் ரன்வீர் சிங்குக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தை அங்கிருந்த சிலர் மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில் ரன்வீர் சிங் வெளியில் வந்து காரின் சேதத்தைப் பார்த்து மீண்டும் காரில் ஏறிச் செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியைப் பற்றிய ‘83’ என்ற படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். கபீர் கான் இயக்கியுள்ள இப்படம் கரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்