மலாலாவின் கதை என் கண்களை குளமாக்கி விட்டது - ட்விங்கிள் கண்ணா நெகிழ்ச்சி

By ஐஏஎன்எஸ்

மலாலாவின் கதை தன் கண்களை குளமாக்கி விட்டதாக நடிகை ட்விங்கிள் கண்ணா கூறியுள்ளார்

சினிமாவிலிருந்து விலகியிருக்கும் நடிகை ட்விங்கிள் கண்ணா, 2015 ஆம் ஆண்டு முதல் புத்தகங்கள் எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது ‘வென் ஐ க்ரோ அப் ஐ வான்ட் டு பி’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்நிலையில் தனது ‘ட்வீக்’ இணையதளத்துக்காக நோபல் பரிசு வென்ற மலாலா யூசுஃப்சாயை பேட்டி எடுத்துள்ளார் ட்விங்கிள் கண்ணா.

இந்த பேட்டி குறித்து ட்விங்கிள் கண்ணா கூறியுள்ளதாவது:

முதலில் மலாலாவை ஆடியோ பேட்டி எடுப்பதாகத் தான் தீர்மானிக்கப்பட்டது. ஆனால அனைத்து ஏற்பாடுகளும் தயாரான பின்னர் திடீரென அது வீடியோ பேட்டியாக மாற்றப்பட்டது. அவசர அவசரமாக நான் என்னை அலங்கரித்துக் கொண்டும், கண்களுக்கு மை தீட்டிக் கொண்டும் பேட்டிக்கு தயாரானேன். ஆனால் இறுதியில் அவர் அனைத்தும் வீணாகிப் போனது. ஏனெனில் மலாலாவின் கதை என் கண்களை குளமாக்கி விட்டது.

இவ்வாறு ட்விங்கிள் கண்ணா கூறியுள்ளார்.

பாகிஸ்தானைத் சேர்ந்த மலாலா யூசுஃப்சாய், பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். 15 வயதுச் சிறுமியாக இருந்த அவரை கடந்த 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், உயர் தப்பினார் மலாலா. உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE