உண்மை விரைவில் வெளியே வரும்: விஷ்ணு விஷால் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

உண்மை விரைவில் வெளியே வரும் என்று விஷ்ணு விஷால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

'வீரதீர சூரன்' என்ற படத்தில் நடித்தபோது சூரிக்கு சம்பளப் பாக்கி வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன். அந்தப் படத்துக்குப் பதிலாக நிலம் வாங்கித் தருவதாகக் கூறி சூரியை மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சூரி அளித்த புகாரின் அடிப்படையில் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தைதான் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியின் புகார் திரையுலகில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதற்கு விஷ்ணு விஷால் தரப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும், பல ஆண்டுகளாக தன்னுடைய மன உளைச்சலுக்கு சூரி தான் காரணம் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

இதனிடையே, தற்போது சூரி புகார் குறித்து உலவி வரும் செய்திகள் தொடர்பாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"உண்மை விரைவில் வெளியே வரும். நான் இதைப் பற்றி பேச வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் என் நண்பர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் என்னையும் என் அப்பாவையும் தவறாகப் பேசுவதை, எப்படி இதை வெளி உலகில் கட்டமைக்கிறார்கள் என்பதைப் பார்த்த பின்பு எனக்கு வேறு வழியில்லை. விசாரணை முடிந்த பிறகு நான் மேற்கொண்டு தெளிவுபடுத்துகிறேன்"

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்