'லிஃப்ட்' படக்குழுவினர் மீது அம்ரிதா நாயர் கோபத்தில் இருக்கிறார்.
'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு முன் 'நட்புனா என்னானு தெரியுமா' என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார் கவின். அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு 'லிஃப்ட்' என்ற புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவினுக்கு நாயகியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளது. ஆகையால், இறுதிக்கட்டப் பணிகளைத் தொடங்கி முடித்துவிட்டது படக்குழு.
இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு வேறொருவரை வைத்து டப்பிங் செய்துவிட்டார்கள் என்ற கோபத்தில் இருக்கிறார் அம்ரிதா ஐயர். அதுவும் தான் ஒரு தமிழ் பெண்ணாக இருந்தும், தன்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் மற்றொருவரை வைத்து டப்பிங் செய்தது தான் இந்தக் கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள்.
» முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி: '800' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
» 'ராதே ஷ்யாம்' அப்டேட்: பூஜா ஹெக்டே கதாபாத்திர லுக் வெளியீடு
'லிஃப்ட்' படத்துக்கு ஒளிப்பதிவாளராக யுவா, இசையமைப்பாளராக மைக்கேல் பிரிட்டோ, சண்டைக்காட்சிகள் இயக்குநராக ஸ்டன்னர் சாம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். விரைவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கி நடைபெறவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago