சூரஜ் பர்ஜாத்யா, அனுராக் காஷ்யப் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: பாயல் கோஷ் 

By ஐஏஎன்எஸ்

இயக்குநர் சூரஜ் பர்ஜாத்யா மற்றும் அனுராக் காஷ்யப் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று பாயல் கோஷ் கூறியுள்ளார்

இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என நடிகை பாயல் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக திரைத்துறையினரும் அவரது முன்னாள் மனைவிகளும் குரல் கொடுத்தாலும் பாயல் கோஷ் தனது நிலையில் தீர்மானமாக இருந்து வருகிறார்.

இதுகுறித்துக் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கோரி மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைப் பாயல் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் பாலிவுட் இயக்குநர் சூரஜ் பர்ஜாத்யா, அனுராக் காஷ்யப் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று பாயல் கோஷ் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“முதன்முதலில் சூரஜ் பர்ஜாத்யாவைப் பார்க்கும்போது வாழ்க்கை பூக்கள் நிறைந்தது என்று நினைத்திருந்தேன். ஆனால், அனுராக் காஷ்யப்பைச் சந்திந்த தருணத்தில் அந்த ஒட்டுமொத்த அர்த்தமும் மாறிவிட்டது.

இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அவை என்னை வித்தியாசமானவராக மாற்றிவிட்டது. எப்படியோ, வாழ்க்கை இப்போது சிறப்பாக உள்ளது. என்னுடைய சினிமா வாழ்க்கையில் ஆரம்ப நாட்களைப் போல புதிதாக இருக்கிறது''.

இவ்வாறு பாயல் கோஷ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

50 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்