'மாநகரம்' இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி

இந்தியில் உருவாகும் 'மாநகரம்' ரீமேக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

2017-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி வெளியான படம் 'மாநகரம்'. இதன் மூலமாக லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமானார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, சார்லி, மதுசூதனன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகே 'கைதி', 'மாஸ்டர்' ஆகிய படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்கி முன்னணி இயக்குநராக உள்ளார். தற்போது 'மாநகரம்' படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ள இந்தப் படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளார். 'மாநகரம்' இந்தி ரீமேக்கில் ஒரு நாயகனாக விக்ராந்த் மாசே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

மற்றொரு நாயகராக இல்லாமல், வேறொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.

'மாநகரம்' படத்தின் இந்தி ரீமேக் முழுக்க மும்பையிலேயே படமாக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் 'லாபம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்