'க/பெ ரணசிங்கம்' படத்துக்கு வரவேற்பு: படக்குழுவினருக்கு விருமாண்டி நன்றி

By செய்திப்பிரிவு

'க/பெ ரணசிங்கம்' படத்துக்குக் கிடைத்த வரவேற்புக்கு ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் விருமாண்டி

விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'க/பெ ரணசிங்கம்'. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால் ஜீ ப்ளக்ஸில் இப்படம் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.

இயக்குநர் பாரதிராஜா, சூர்யா உள்ளிட்ட திரையுலகினரும் படக்குழுவினரைப் பாராட்டி தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளனர். தனது முதல் படத்துக்குக் கிடைத்த பாராட்டு தொடர்பாக இயக்குநர் விருமாண்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இயக்குநர் விருமாண்டி கூறியிருப்பதாவது:

"நான் இயக்குநர் செல்வாவிடம் துணை, இணை இயக்குநராக பல திரைப்படங்களில் பணியாற்றி உள்ளேன். தற்போது விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் 'க/பெ ரணசிங்கம்' படத்தை எழுதி இயக்கியுள்ளேன்.

இத்திரைப்படம் கடந்த 2 ஆம் தேதியன்று டி.டி.ஹெச் தளத்தில் ஜீ ப்ளக்ஸ், ஓடிடி தளத்தில் ஜீ5 ஆகியவற்றில் வெளியாகி உலகமெங்கும் மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இன்று (அக்டோபர் 9) வெளியாகவுள்ளது.

தமிழில் மாபெரும் வெற்றியைத் தந்த ரசிகர்களுக்கும் மக்களிடம் கொண்டு சேர்த்த அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நெகிழ்வான தருணத்தில் எனது தந்தை கலைமாமணி பெரிய கருப்பத்தேவர், தாயார் அன்னமயில், என் வாழ்வில் அத்தனை சோதனையான காலகட்டத்திலும் என்னை தாங்கிப்பிடித்த என் மனைவி செல்வி, என் உடன் பிறந்த சகோதரர்கள் கார்த்திக், பால்பாண்டி, கோபாலகிருஷ்ணன் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

'க/பெ ரணசிங்கம்' படத்தில் என்னுடன் பயணித்த பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், வசனகர்த்தா நண்பன் சண்முகம் முத்துசாமி, இசையமைப்பாளர் ஜிப்ரான், பாடலாசிரியர் வைரமுத்து, ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம், சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன், படத்தொகுப்பு செய்த சிவாநந்தீஸ்வரன், கலை இயக்குநர் லால்குடி இளையராஜா, நடன இயக்குநர் ராஜூ சுந்தரம் மற்றும் நண்பன் எஸ்.கே.வெற்றிச் செல்வன், இயக்குநர் தம்பி தாஸ் ராமசாமி மற்றும் எனது இணை, துணை, உதவி இயக்குநர்களுக்கு நன்றி.

நீங்கள் சாத்தியப்படுத்திய வெற்றி சந்தோஷத்தை மட்டுமல்ல அடுத்த படத்திற்கான பொறுப்பையும் தந்துள்ளது".

இவ்வாறு இயக்குநர் விருமாண்டி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்