நடன இயக்குநர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஃபாரா கான், நடன இயக்குநர், நடிகர் மற்றும் இயக்குநரான பிரபுதேவா, தெலுங்கு திரைப்பட நட்சத்திரம் ராம் சரண் தேஜா ஆகியோர் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான டிஜிட்டல் நடன நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர்.
நடனத்தோடு உங்கள் வாழ்க்கையைச் சரியாக்குங்கள் (Heal URlife through Dance) என்கிற பெயரில் ஆரம்பிக்கப்படும் இந்த நிகழ்ச்சி, கரோனா நெருக்கடி காலகட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் மனநலத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி குறித்துப் பேசியிருக்கும் ராம் சரண், "மாற்றுத் திறனாளிகள் அவர்களது வாழ்க்கையின்பால் வைத்திருக்கும் நேர்மறை அணுகுமுறை மற்றும் அவர்களது ஊக்கத்தைக் கொண்டாடுவதே இந்த நிகழ்ச்சி. நமது நாட்டில் பல திறமைசாலிகள் உள்ளனர். தங்களுக்கு முன் இருக்கும் தடைகளைச் சவால்களாகப் பார்த்து வெற்றி பெறுகின்றனர்.
அப்படியான அற்புதத் திறமைசாலிகளை ஒன்றிணைந்து, கண்ணியத்தோடும், நயத்தோடும் வாழ்க்கையைக் கொண்டாட விரும்பினோம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள், பார்வையாளர்கள் என இரண்டு தரப்புக்கும் இந்த நிகழ்ச்சி உற்சாகத்தைத் தரும்.
» வைரலான ட்ரெட்மில் நடனம்: அஸ்வின் குமாருக்கு கமல் பாராட்டு
» 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு வெளிநாட்டினர் நடனம்: வைரலாகும் வீடியோ
நாம் இப்போது எதிர்கொண்டிருக்கும் கடுமையான காலகட்டத்தில், அனைவருக்கும் மன நல ஆரோக்கியத்தைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது. நாம் வாழும் இந்த வேகமான வாழ்க்கையில், பலர் தங்களது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். அவர்களுக்கு விருப்பமான விஷயங்களைச் செய்வதில்லை. அவை அவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும்.
நமது ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான ஒரு நினைவூட்டலாக இந்த நிகழ்ச்சி இருக்கும். நடனம் நமது மனதில் பல நேர்மறைச் சிந்தனைகளைக் கொண்டுவரும். தினம் தினம் நாம் எதிர்கொள்ள வேண்டிய கஷ்டத்துக்கு வடிகாலாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago