ஆர்.ஜே. பாலாஜி நடித்து, இயக்கியுள்ள 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் ஓடிடி தளத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
'எல்.கே.ஜி' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி நடித்து, இயக்கியுள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'. இந்தப் படத்தை அவருடன் என்.ஜே.சரவணனும் இணைந்து இயக்கியுள்ளார். இதில் நயன்தாரா, மெளலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன், 'மூக்குத்தி அம்மன்' படம் வெளியாகும் என ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது திரையரங்குகள் திறக்கத் தாமதமாவதால், ஹாட்ஸ்டார் ஓடிடியில் இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஐபிஎல் போட்டிகளின் வர்ணனைப் பணிகளிலிருந்து ஆர்.ஜே. பாலாஜி 20 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago