'அசுரன்' ஒரு ஸ்பெஷல்.. நிறைய கற்றுக் கொடுத்தது: வெற்றிமாறன் பெருமிதம்

'அசுரன்' தனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு பெற்றது. 2019-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி வெளியான இந்தப் படத்தை இந்தியத் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலருமே பார்த்துப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இன்று (அக்டோபர் 4) 'அசுரன்' வெளியாகி ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இதை முன்னிட்டு படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் வீடியோ வெளியிட்டு தங்களுடைய சந்தோஷத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வீடியோக்களில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியிருப்பதாவது:

"'அசுரன்' ஒரு ஸ்பெஷலான திரைப்படம். நிறைய கற்றுக் கொடுத்தது. இந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையுமே வேறொரு தளத்தில் எடுத்துக் கொண்டு போய் வைத்துள்ளது. அந்த விதத்தில் கற்றுக் கொண்டதையும், எங்களுக்குக் கொடுத்ததையும் வைத்துப் பார்த்தால் 'அசுரன்' ஒரு ஸ்பெஷல் திரைப்படம்"

இவ்வாறு வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தப் படம் தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது. அதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE