செய்தி சேனல்களைக் கிண்டல் செய்துள்ள டாப்ஸி

By செய்திப்பிரிவு

செய்தி சேனல்களை தனது ட்விட்டர் பதிவில் கிண்டல் செய்துள்ளார் டாப்ஸி

சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு வட இந்திய ஊடகங்களில் பெரும்பாலானவை, அது தொடர்பான செய்திகளுக்கே முக்கியத்துவம் அளித்து வந்தது. சுஷாந்த் சிங் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, போதை மருந்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

போதை மருந்து உபயோகம் தொடர்பான சுஷாந்த் சிங்கின் காதலி ரியா, ரியாவின் சகோதரர் உள்ளிட்ட 16 பேரைக் கைது செய்துள்ளது போதை மருந்து தடுப்புப் பிரிவு. அதே வேளையில், கங்கணாவின் தொடர் குற்றச்சாட்டுகளால் பெரும் சர்ச்சை உருவானது. இவை அனைத்துமே செய்தி தொலைக்காட்சிகளால் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வந்தன.

இதனை அவ்வப்போது டாப்ஸி சாடி வந்தார். தற்போது, அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதியளித்துவிட்டது. திரையரங்குகள் திறப்பதற்குப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு அறிவித்துவிட்டது.

இது தொடர்பாக டாப்ஸி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்க அனுமதி கிடைத்திருப்பதால் இனி சில செய்தி சேனல்கள் 50 சதவீதம் உண்மையான செய்திகளில் கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. எங்களின் சார்பாக தேவைக்கு அதிகமாகவே பொழுதுபோக்கு தந்ததற்கு நன்றி நண்பர்களே. இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்"

இவ்வாறு டாப்ஸி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE