ஐஸ்வர்யா ராயுடனான ஒப்பீடு விளம்பரத்துக்காக செய்யப்பட்டது என்று நடிகை சினேகா உல்லால் கூறியுள்ளார்.
2005ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘லக்கி: நோ டைம் ஃபார் லவ்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சினேகா உல்லால். இதனைத் தொடர்ந்து இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராயின் தோற்றத்தை ஒத்திருந்ததாக கூறப்பட்டதால் முதல் படத்திலேயே பிரபலமானார். மேலும் ஐஸ்வர்யா ராயுடனான ஒப்பீட்டினாலேயே இவருடைய நடிப்புத் திறமை பெரிதும் பேசப்படாமல் போனதற்கான காரணம் என்றும் கூறப்படுகிறது. தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ள ‘எக்ஸ்பைரி டேட்’ என்ற வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் சினேகா உல்லால் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராயுடனான ஒப்பீடு குறித்து சினேகா உல்லால் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
என்னுடைய சொந்த தோற்றமே எனக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. எனவே ஐஸ்வர்யா ராயுடனான ஒப்பீடு என்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. அதுமட்டுமின்றி அந்த திரைப்படத்தின் விளம்பரத்துக்காகவே அத்தகைய ஒப்பீட்டை செய்தனர். மற்றபடி அது ஒரு பெரிய விஷயமாக இருக்கவில்லை.
என்னுடைய வாழ்க்கையில் எந்த வருத்தமும் எனக்கு இருந்ததில்லை. மிக சீக்கிரமாக் சினிமாவுக்கு வந்துவிட்டேனோ என்று தோன்றுகிறது. இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருந்தால் எனக்கு சில முக்கியமான விஷயங்களை பற்றி புரிதல்களும், நடிப்பிற்கான பயிற்சியும் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
நீண்ட நாட்களுக்கு பிறகு நடிப்பதால் ‘எக்ஸ்பைரி டேட்’ தொடருக்கான படப்பிடிப்புக்கு செல்லும்போது மிகவும் பதட்டமாக இருந்தது. ஆனால் அவையெல்லாம் மறைந்து விட்டதாக உணர்ந்தேன். என்னால் முடிந்தவரை சிறப்பாக செய்துள்ளேன்.
இவ்வாறு சினேகா உல்லால் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago