லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சிம்பு?

By செய்திப்பிரிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகத் தகவல் பரவி வருகிறது.

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து கமல் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார் லோகேஷ் கனகராஜ். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே, ராஜ்கமல் நிறுவனத்துக்கு லோகேஷ் கனகராஜ் இரண்டு படங்கள் ஒப்பந்தமாகியுள்ளார் என்றும், கமல் படத்தை முடித்துவிட்டு மற்றொரு படத்தில் சிம்புவை இயக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இது தொடர்பாக சிம்புவைத் தொடர்பு கொண்டு கமல் பேசியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக விசாரித்த போது, "ராஜ்கமல் நிறுவனத்துக்கு ஒரு படம் தான் இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதில் கமல் நடிக்கவுள்ளார். இதுவரை இன்னொரு படம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

மேலும், லோகேஷ் கனகராஜ் - சிம்பு - ராஜ்கமல் நிறுவனம் இணைவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான். ஆனால், அது வெறு பேச்சுவார்த்தையுடன் முடிந்துவிட்டது. அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. தற்போது இந்தத் தகவல் தான் வெளியாகியுள்ளது. ஆனால், அதில் உண்மையில்லை" என்று தெரிவித்தார்கள்.

கமல் நடிக்கும் படத்தை இயக்கி முடித்துவிட்டு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்