'புத்தம் புதுக் காலை' ஆந்தாலஜி படத்தில் ஒவ்வொரு இயக்குநர் படத்தின் பெயரும், நடிகர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் தயாரித்து வரும் ஆந்தாலஜி இன்று (செப்டம்பர் 30) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 'புத்தம் புதுக் காலை' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த ஆந்தாலஜியில் ஐந்து குறும்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை ராஜீவ் மேனன், கெளதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் அக்டோபர் 16-ம் தேதி 'புத்தம் புதுக் காலை' வெளியாகவுள்ளது. தற்போது இந்த ஆந்தாலஜியில் ஒவ்வொரு இயக்குநரின் குறும்படத்துக்கும் என்ன பெயர், யாரெல்லாம் நடித்துள்ளார்கள் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
இளமை இதோ இதோ: இயக்குநர் சுதா கொங்கரா - காளிதாஸ் ஜெயராம், ஜெயராம், ஊர்வசி, கல்யாணி ப்ரியதர்ஷன்.
அவரும் நானும்/ அவளும் நானும்: இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் - எம்.எஸ். பாஸ்கர், ரீத்து வர்மா
காஃபி, எனி ஒன்? - இயக்குநர் சுஹாசினி மணிரத்னம் - அனு ஹாசன், ஸ்ருதி ஹாசன்
ரீயூனியன்: இயக்குநர் ராஜீவ் மேனன் - ஆண்ட்ரியா, லீலா சாம்சன், சிக்கில் குருச்சரன்
மிராக்கிள்: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - பாபி சிம்ஹா, முத்துக்குமார்
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
14 mins ago
சினிமா
35 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago