அஞ்சனா இயக்கத்தில் முகென் ராவ் நடிக்கும் படத்துக்கு 'வெற்றி' எனத் தலைப்பிட்டுள்ளனர்.
2011-ம் ஆண்டு நானி, கார்த்திக் குமார், நித்யா மேனன், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வெப்பம்'. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் அஞ்சனா அலி கான். அந்தப் படத்துக்குப் பிறகு படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார்.
தற்போது, தனது அடுத்த படத்தின் பணிகளை மும்முரமாகத் தொடங்கிவிட்டார் அஞ்சனா. இதில் நாயகனாக முகென் ராவ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் நாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். இதில் நாயகியாக அனு கீர்த்தி ஒப்பந்தமாகியுள்ளார்.
'வெற்றி' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, எடிட்டராக ஆண்டனி, இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, ஆடை வடிவமைப்பாளராக அமிர்தாராம் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.
» வெற்றிகளால் மகிழ்ச்சியா? அழுத்தமா?- ஏ.ஆர்.ரஹ்மான் பதில்
» சண்டைக்குப் பிறகு சமாதானம்: மீண்டும் கணவருடன் இணைந்த பூனம் பாண்டே
'வெற்றி' படத்தின் கதைக்களம் குறித்து அஞ்சனா அலி கான் கூறியிருப்பதாவது:
" 'வெற்றி' படத்தின் திரைக்கதை மனதுக்கு நெருக்கமானது. மிகவும் உணர்வுபூர்வமானது. இது, ஒரு இளைஞன் வாழ்வின் அனைத்து இடர்களுடனும் போராடி தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் கதையாகும். வெற்றி என்பது நாயக கதாபாத்திரத்தின் பெயர் மட்டுமே அல்ல, அது ஒரு குறியீடு. படத்தின் மொத்தக் கதையுமே வெற்றியை எப்படி அடைவது என்பதுதான்.
வாழ்வின் இடர்ப்பாடுகளைக் கடந்து நாயகன் எப்படி மனிதத்தோடு தன் லட்சியத்தை அடைகிறான் என்பதே கதை".
இவ்வாறு அஞ்சனா அலி கான் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago