கர்நாடகாவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் அதனை பயன்படுத்திய கும்பல் குறித்து, கடந்த ஒரு மாதமாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் மங்களூரு போலீஸார் போதை மாத்திரைகளை விற்ற இந்தி நடிகரும் நடன இயக்குநருமான கிஷோர் அமன் ஷெட்டி, அவரது நண்பர் தருண் ராஜ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது கன்னட தொலைக்காட்சி நெறியாளரும் நடிகையுமான அனுஸ்ரீக்கு தங்களுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மங்களூரு போலீஸார் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுஸ்ரீக்கு அழைப்பாணை அனுப்பினர். இதன்படி மங்களூரு குற்றப்பிரிவு போலீஸார் முன்பு அனுஸ்ரீ நேற்று காலை 11 மணியளவில் ஆஜரானார். காவல் துணை கண்காணிப்பாளர் வினய் கோயங்கர், காவல் ஆய்வாளர் சிவபிரகாஷ் ஆகிய இருவரும் சுமார் 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago