‘ப்ளாக் பேந்தர்’ போஸ்மேனைக் கவுரவப்படுத்திய டிஸ்னி

By ஐஏஎன்எஸ்

ஹாலிவுட் படங்களில் மிக முக்கியமான நடிகராக வலம் வந்தவர் சாட்விக் போஸ்மேன். மார்வெல் நிறுவனத்தின் புகழ்பெற்ற ‘ப்ளாக் பேந்தர்’ கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர். 2016-ம் ஆண்டு வெளியான ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ படத்தில் ப்ளாக் பேந்தராக முதன்முதலில் தலைகாட்டினார் போஸ்மேன்.

2017-ம் ஆண்டு சாட்விக் போஸ்மேனை வைத்து ‘ப்ளாக் பேந்தர்’ கதாபாத்திரத்துக்காகவே ஒரு முழு நீளப் படத்தைத் தயாரித்தது மார்வெல் நிறுவனம். படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் உலகம் முழுவதுமுள்ள மார்வெல் ரசிகர்களின் மனதில் ப்ளாக் பேந்தராகவே பதிந்தார் போஸ்மேன்.

இந்தச் சூழலில் கடந்த 2016-ம் ஆண்டு போஸ்மேனுக்கு பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிகிச்சை மேற்கொண்டு வந்தார் போஸ்மேன். ஆனால், தனக்குப் புற்றுநோய் இருப்பது குறித்து வெளி உலகத்துக்கு அவர் அறிவிக்கவில்லை. சிகிச்சையின் நடுவே திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி சாட்விக் போஸ்மேன் ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார். அவரது மறைவு ஹாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு முன்னணி நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் இரங்கல் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள டிஸ்னிலேண்ட் கேளிக்கை பூங்காவில் சாட்விக் போஸ்மேனைக் கவுரவப்படுத்தும் வகையில் மிகப்பெரிய ஓவியம் ஒன்றை இடம்பெறச் செய்துள்ளது டிஸ்னி நிறுவனம்.

அதில் போஸ்மேன் ப்ளாக் பேந்தர் முகமூடி அணிந்த ஒரு சிறுவனுக்கு வகாண்டா சல்யூட் வைப்பதுபோல வரையப்பட்டுள்ளது. இதை ஏராளமானோர் புகைப்படம் எடுத்து தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த ஓவியத்தை வரைந்த நிக்கோலஸ் ஸ்மித் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில், ''அரசர் சாட்விக் போஸ்மேனுக்கு நான் அர்ப்பணித்த என்னுடைய ஓவியம் தற்போது டிஸ்னிலேண்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்