அக்ஷய் குமார் கலந்துகொண்ட 'இன் டு தி வைல்ட் வித் பியர் க்ரில்ஸ்' நிகழ்ச்சி தொலைக்காட்சியில் புதிய சாதனை படைத்துள்ளது.
'இன் டு தி வைல்ட் வித் பியர் க்ரில்ஸ்' என்கிற நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகிறது. காடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் விலங்குகளைப் பற்றித் தெரிந்துகொள்வது, அந்தச் சூழலுக்கு ஏற்றாற்போல வாழ்வது, உணவு சமைத்துச் சாப்பிடுவது, கரடு முரடான இடங்களில் பயணம் செய்து சாகசம் காட்டுவது என இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகப் பிரபலம்.
சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், நடிகர் ரஜினிகாந்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இயற்கை, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே இப்படிப் பிரபலங்களைப் பங்கேற்க வைத்து நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் அக்ஷய் குமார் கலந்துகொண்டார். இதற்கான ப்ரமோ சமூக வலைதளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்ச்சி கடந்த செப்.14 அன்று டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது.
» தொழிலாளியின் காலில் விழுந்த எஸ்பிபி: இணையத்தில் வைரலாகும் வீடியோ
» கரண் ஜோஹர் பார்ட்டி வீடியோ விவகாரம்: செய்தி ஊடகங்களைச் சாடிய ஜாவேத் அக்தர்
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட தினத்தன்று இதை சுமார் 1.1 கோடி மக்கள் பார்த்துள்ளனர். அந்த வாரம் முழுவதும் செய்யப்பட்ட மறு ஒளிபரப்பில் ஏறக்குறைய 2 கோடிக்கும் அதிகாமானோர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியையொட்டி ட்விட்டரில் #KhiladiOnDiscovery என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இந்த ஹேஷ்டேக் 100 கோடி பயனர்களைச் சென்றடைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago