படப்பிடிப்புக்காக விண்வெளிக்கு செல்லும் டாம் க்ரூஸ்

By செய்திப்பிரிவு

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை முழுக்க முழுக்க விண்வெளியில் நடத்தவுள்ளார். இதற்காக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அவருக்கு உதவுகிறது. அமெரிக்கத் தொழிலதிபரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க்கின் நிறுவனத்துக்குச் சொந்தமான விண்வெளி நிலையத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (21.09.20) அன்று ஸ்பேஸ் ஷட்டில் அல்மனாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு விண்கலத்தின் புகைப்படமும் அதில் பயணம் செய்யவுள்ள நபர்களின் பெயர்களை அடங்கிய பட்டிலும், அவர்களுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.

அந்த பட்டியலில் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் மற்றும் இயக்குநர் டக் லிமான் இருவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனைக் கண்ட ஹாலிவுட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து அதை தங்கள் சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கினார். இதனால் இந்த தகவல் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

57 வயதான டாம் க்ரூஸ் தனது திரைப்படத்தின் பல ஆபத்தான சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பார். 'மிஷன் இம்பாசிபிள்' படங்களின் சண்டைக் காட்சிகள் அதற்கு ஒரு சான்று. 'மிஷன் இம்பாசிபிள்' பட வரிசையின் 'கோஸ்ட் ப்ரோட்டாகால்' என்ற பாகத்தில் ஒரு காட்சிக்காக, துபாயின் பூர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ஏறினார்.

2018-ம் ஆண்டு, 'ஃபால் அவுட்' பாகத்தில் ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கும்போது, ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு கட்டிடத்துக்குத் தாவும்போது அவரது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுப் படப்பிடிப்பு சில வாரங்கள் தடைப்பட்டது. இந்த விண்வெளித் திரைப்படத்திலும் பல்வேறு சாகசக் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்