போதை மருந்து விவகாரம்: 'உட்தா பஞ்சாப்' தயாரிப்பாளரிடம் விசாரணை

'உட்தா பஞ்சாப்', 'கஜினி' உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர் மது மண்டேனா வெர்மாவிடம் போதை மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வரும் போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார், ஏற்கெனவே பாலிவுட் நட்சத்திரங்கள் சிலருக்கும், அவர்களுடன் தொடர்பிலிருக்கும் சிலருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.

தற்போது அந்த வரிசையில் தயாரிப்பாளர் மது மண்டேனா வெர்மாவிடம் புதன்கிழமை அன்று விசாரணை நடத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நடந்து வரும் விசாரணையில் மதுவின் பெயர் வந்ததையடுத்து அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

'குயின்', 'கஜினி', 'உட்தா பஞ்சாப்', 'ரக்த சரித்ரா' உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை மது தயாரித்துள்ளார்.

சாஹா மற்றும் மதுவிடம் இன்று விசாரணை நடந்தது. சாஹா மற்றும் சுஷாந்தின் மேலாளர் ஷ்ருதி மோடியின் வாக்குமூலத்தை சிபிஐ தரப்பு பதிவு செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரச் சொல்லி நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் விசாரணைக்கு வரவில்லை.

க்வான் திறன் மேலாண்மை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி த்ருவ் சிட்கோபேகரை அதிகாரிகள் நேற்று விசாரித்தனர். சுஷாந்தின் திறன் மேலாளர் ஜெயா சாஹாவிடமும், இரண்டாவது முறையாக விசாரணை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 6 மணி நேரங்களுக்கு மேல் இவர்களிடம் விசாரணை நடந்ததாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE