ரியாலிட்டி நிகழ்ச்சி பிரபலமான கிம் கார்டாஷியன் தனது கணவர் கான்யே வெஸ்டை விவாகரத்து செய்யத் திட்டமிட்டுள்ளதாக பேஜ் சிக்ஸ் என்கிற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கத் தொலைக்காட்சி பிரபலமும், மாடல் மற்றும் தொழிலதிபருமான கிம் கார்டாஷியன், பிரபல பாடகர் கான்யே வெஸ்டை 2014-ம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். தற்போது கான்யே வெஸ்டின் கருக்கலைப்புக்கு எதிரான கொள்கைக்காகவும், இரு துருவ நோய்க்காகவும் (bipolar disorder) கிம் கார்டாஷியன் அவரை விவாகரத்து செய்யவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்காக கிம் முழுமையாகத் திட்டமிட்டுவிட்டதாகவும், கான்யே வெஸ்டின் தற்போதைய மனநலப் பிரச்சினை தீருவதற்கு கிம் காத்திருப்பதாகவும் இந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே கான்யே வெஸ்ட் கருக்கலைப்புக்கு எதிராகப் பல இடங்களில் பேசி வருகிறார். கிம் மற்றும் கான்யேவின் முதல் மகளான நார்த் வெஸ்ட் பிறப்பதற்கு முன், கிட்டத்தட்ட கருக்கலைப்பு குறித்து தாங்கள் முடிவு செய்ததாக ஒரு கூட்டத்தில் பேசிய கான்யே, தான் கிட்டத்தட்ட தனது மகளைக் கொன்றுவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
» 'ஜெர்சி' இந்தி ரீமேக் தனக்குக் கிடைத்த பாராட்டுதான்: நானி நெகிழ்ச்சி
» ’ஊர்வசி’ ஷோபா... மகத்துவ நாயகி; தனித்துவ நடிகை! - நடிகை ஷோபா பிறந்தநாள் இன்று
ஆனால், இந்தச் சம்பவம் குறித்து கான்யேவுக்கு ஆதரவாகப் பேசியிருந்த கிம், கான்யேவின் மனநலப் பிரச்சினைகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியிருந்தார். அப்போதே கிம்முக்கு விவாகரத்து செய்யத் திட்டமிருந்ததாகவும், ஆனால், அது வெளி உலகில் சரியான தோற்றத்தைத் தராது என்பதால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் கான்யே வெஸ்ட் ஒரு நிகழ்ச்சியில் மீண்டும் தனது முதல் குழந்தையைக் கருக்கலைப்பு செய்ய முடிவு எடுத்தது குறித்தும், பின் அதுகுறித்து அழும் அளவுக்குதான் உணர்ச்சிகரமான நபராக இருந்ததாகவும் கூறியிருந்தார்.
கடந்த வாரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "நார்த்தீ (கான்யேவின் மகள்), நான் போருக்குச் செல்கிறேன், என் உயிரை ஆபத்தின் முன் வைக்கிறேன். நான் கொலை செய்யப்பட்டால், இந்த வெள்ளைக்காரர்களின் ஊடகம் நான் நல்ல மனிதனாக இல்லை என்று சொன்னால் நம்பாதே. உன்னை என் வாழ்க்கையிலிருந்து நீக்க மற்றவர்கள் அச்சுறுத்தல் செய்தால், நான் உன்னை என்றும் நேசித்தேன் என்பதைத் தெரிந்துகொள்" எனத் தனது மகளுக்கு கான்யே வெஸ்ட் தகவல் பகிர்ந்திருந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago