'ஜெர்சி' இந்தி ரீமேக் தனக்குக் கிடைத்த பாராட்டுதான்: நானி நெகிழ்ச்சி

By ஐஏஎன்எஸ்

'ஜெர்சி' திரைப்படம் இந்தியில் எடுக்கப்படுவது தனக்குக் கிடைத்த பாராட்டுதான் என்று நடிகர் நானி கூறியுள்ளார்.

நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில், கவுதம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படம் 'ஜெர்சி'. அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படம் விமர்சகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. நல்ல வசூலையும் பெற்றது. உடனடியாக மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் பணிகளும் தொடங்கின.

இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் நடித்து வருகிறார். இதுகுறித்துப் பேசியிருக்கும் நானி, "எனது திரைப்படம் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது என்பதே என் உழைப்புக்குக் கிடைத்த பாராட்டுதான். அவர்களுக்கு அது பிடித்திருப்பதால்தானே ரீமேக் செய்கின்றனர்.

‘ஜெர்சி' திரைப்படத்தைப் பொறுத்தவரை, அவ்வளவு அழகான கதை இன்னும் பெரிய ரசிகர் வட்டத்துக்குச் செல்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சி. ஷாகித் போன்ற ஒரு நடிகர் இந்தியில் இதில் நடிக்கும்போது கண்டிப்பாக இது பெரிய ரசிகர் கூட்டத்தைச் சென்றடையும் என்று எனக்கு உறுதியாகத் தெரியும்.

பாலிவுட் ரசிகர்களுக்கு இது தெலுங்கில் வந்த 'ஜெர்சி' திரைப்படத்தின் ரீமேக் என்பது தெரியாமல் இருக்கலாம், என்னைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் 'ஜெர்சி' படத்தைப் பார்ப்பார்கள். இயக்குநர் கவுதமின் கதையைப் பார்ப்பார்கள். அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது" என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே தெலுங்கில் பெரும் வெற்றிபெற்ற 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான 'கபீர் சிங்' திரைப்படத்தில் ஷாகித் கபூர் நடித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

மேலும்