டாப்ஸி நடிப்பில் வெளியான ‘தப்பட்’ திரைப்படம் இரண்டு ஆசிய திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அனுபவ் சின்ஹா இயக்கத்தில் டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தப்பட்'. விமர்சனரீதியாகக் கொண்டாடப்பட்ட இந்தப் படம் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் காட்சியமைப்புகள், குடும்ப வன்முறை குறித்துச் சொல்லப்பட்ட கருத்துகள் உள்ளிட்ட பல விஷயங்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பின.
இந்நிலையில் சிறந்த படம் மற்றும் சிறந்த எடிட்டிங் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளுக்காக 14-வது ஆசிய திரைப்பட விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் ‘தப்பட்’ இடம்பெற்றுள்ளது.
14-வது ஆசிய திரைப்பட விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. இதில் 11 நாடுகளைச் சேர்ந்த 39 திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த விருது வழங்கும் நிகழ்வு கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைனில் பூசான் சர்வதேச திரைப்பட விழாவுடன் இணைந்து நடைபெற உள்ளது.
» அனுராக் மீது நடிகை பாயல் கோஷ் போலீஸில் புகார்
» மசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத் ஆவேசம்
ஆசிய திரைப்பட விருதுக்கு ‘தப்பட்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறித்து இயக்குநர் அனுபவ் சின்ஹா கூறும்போது, ''இப்படத்தை இயக்கும்போது இது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உலக அளவில் பாராட்டுகளைப் பெறும் என்று நான் நினைக்கவில்லை. அமெரிக்கா, ஜெர்மனி, தைவான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த எனது இந்தியர்கள் அல்லாத நண்பர்களிடம் பேசும்போதே இதுகுறித்து நான் தெரிந்து கொண்டேன்.
இப்படத்தின் கதையை நான் முதலில் கிராமத்தில் நடப்பதுபோல எழுதவே திட்டமிட்டிருந்தேன். ஆனால் என் குழுவில் இருந்த பெண்கள் பலரும் இது போன்ற சம்பவங்கள் நகரத்தில் வசிக்கும் மேல்தட்டு மக்கள் மத்தியிலேயே நடப்பதாக என்னிடம் கூறினார்கள்'' என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago