பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக பல்வேறு பெண்கள் குரல் கொடுத்து வருவதை இயக்குநர் அனுபவ் சின்ஹா பாராட்டியுள்ளார்.
இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக நடிகை பாயல் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு அனுராக் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அனுராக் மீதான இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாகப் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். நடிகைகள் டாப்ஸி, டிஸ்கா சோப்ரா, சுர்வீன் சாவ்லா, அனுராக்கின் முன்னாள் மனைவிகள் ஆர்த்தி பஜாஜ், கல்கி கொச்சிலின் ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதைப் பாராட்டியுள்ள இயக்குநர் அனுபவ் சின்ஹா, “பெண்கள், அவர்களின் மதிப்புமிக்க துணைகளுக்காகக் குரல் கொடுப்பதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி பெண்களே. மீடூ இயக்கம் அரசியலாக்கப்படாமல் நீங்கள் பார்த்துக் கொண்டீர்கள். இந்த ட்வீட்டின் மூலம் உங்கள் அனைவருக்கும் என் அன்பைத் தெரிவிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
» பிரபாஸ் படத்தில் இணைந்த சிங்கிதம் சீனிவாச ராவ்
» விஜய் - வெற்றிமாறன் இணைந்து பணிபுரிய விரும்புகிறார்கள்: ஜி.வி.பிரகாஷ்
முன்னதாக, "மீடூ இந்தியா இயக்கத்தின் புனிதத்தை ஜாக்கிரதையுடன் இணைந்து பாதுகாக்க வேண்டியது ஆண்கள் மற்றும் பெண்களின் பொறுப்பாகும். அது மிக மிக மிக முக்கியமான இயக்கம், பெண்களின் கண்ணியத்தைக் காப்பதைத் தாண்டி வேறு எதற்காகவும் அதைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது" என்று அனுபவ் சின்ஹா கூறியிருந்தார்
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
31 mins ago
சினிமா
39 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago