பிரபாஸ் படத்தில் இணைந்த சிங்கிதம் சீனிவாச ராவ்

By செய்திப்பிரிவு

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள புதிய படத்தில் சிங்கிதம் சீனிவாச ராவ் இணைந்துள்ளார்.

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் 'ராதே ஷ்யாம்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, 'மஹாநடி' படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார்.

தற்போது, இந்தப் படத்தில் சிங்கிதம் சீனிவாச ராவ் இணைந்துள்ளார். அவர் தான் திரைக்கதை பணியில் வழிகாட்டியாகச் செயல்படவுள்ளார். இன்று (செப்டம்பர் 21) சிங்கிதம் சீனிவாச ராவின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது 'பிரபாஸ் 21' படக்குழு.

'பிரபாஸ் 21' படத்தில் கவனம் செலுத்திக்கொண்டே, ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் 'ஆதிபுருஷ்' படத்திலும் கவனம் செலுத்த பிரபாஸ் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE