இயக்குநராக அறிமுகமாகும் வினாயகன்

By செய்திப்பிரிவு

மலையாள நடிகரும், இசைக் கலைஞருமான வினாயகன் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

1995-ம் ஆண்டு 'மாந்த்ரீகம்' என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமானவர் வினாயகன். தொடர்ந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர, நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர். 2016-ம் ஆண்டு துல்கர் சல்மான் நாயகனாக நடித்த 'கம்மட்டி பாடம்' திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக வினாயகனுக்கு கேரள அரசின் சிறந்த நடிகருக்கான மாநில விருது கிடைத்தது.

தமிழில் விஷால் நடித்த 'திமிரு', தனுஷ் நடித்த 'மரியான்' ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கெளதம் மேனன்' இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை

சமீபத்தில் ஃபகத் பாசிலின் 'ட்ரான்ஸ்' திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததோடு அந்தப் படத்தின் டைட்டில் பாடலுக்கும் வினாயகன் இசையமைத்திருந்தார். திரைப்பட உலகில் தனது 25-வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் வினாயகன் தற்போது இயக்குநராக முடிவெடுத்துள்ளார்.

‘பார்ட்டி’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ஆஷிக் அபுவும், நடிகை ரீமா கல்லிங்கலும் இணைந்து தயாரிக்கின்றனர். ‘பார்ட்டி’ திரைப்படத்துக்கான திரைக்கதையையும் வினாயகனே எழுதியுள்ளார். இந்தப் படம் பற்றிய அறிவிப்பை ஆஷிக் அபு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்