இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் #MeToo புகார்

By ஐஏஎன்எஸ்

இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி நடந்ததாக நடிகை பாயல் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

பணிபுரியும் இடத்தில் நடக்கும் பாலியல் கொடுமை, அத்துமீறல் உள்ளிட்ட பிரச்சினைகளை பெண்கள் துணிந்து சொல்ல ஹாலிவுட்டில் #MeToo என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் இந்த இயக்கத்தின் தாக்கத்தால் பல்வேறு பிரபலங்கள் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். அதற்கான ஆதாரங்களை சம்மந்தப்பட்டவர்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். பாலிவுட்டில் கூட பலர் மீதும் இப்படியான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

தனது ட்விட்டர் இது குறித்து பதிவிட்டுள்ள பாயல் கோஷ் கூறியுள்ளதாவது:

அனுராக் காஷ்யப் என்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, இந்த புத்திசாலி மனிதருக்கு பின்னால் இருக்கும் தீய சக்தியை நாட்டு மக்கள் பார்க்கும் வகையில் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனால் எனக்கும் என் பாதுகாப்பும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை நான் அறிவேன். தயவு செய்து உதவுங்கள்’

இவ்வாறு பாயல் கோஷ் கூறியுள்ளார்.

பாயலின் இந்த குற்றச்சாட்டுக்கு நடிகை கங்கணா ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளார். கடந்த சில தினங்களாக கங்கணா - அனுராக் இடையே ட்விட்டரில் வார்த்தைப் போர் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்