'அந்தாதூன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் முடிவாகியுள்ளனர்.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது.
இந்தப் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தெலுங்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் நிதின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மெர்லபாகா காந்தி இயக்கவுள்ள இந்தப் படத்தில் இதர கதாபாத்திரத்துக்கான தேர்வுகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
தற்போது தபு கதாபாத்திரத்தில் தமன்னா, ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நபா நடேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 'அந்தாதூன்' படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் தபு. அதில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
» சினிமாவை விட்டுவிடச் சொன்ன ரசிகருக்கு லட்சுமி மேனன் பதிலடி
» அடுத்த ஜேம்ஸ்பாண்ட் டாம் ஹார்டியா? - ஹாலிவுட் ஊடகங்கள் தகவல்
தாகூர் மது வழங்க சுதாகர் ரெட்டி மற்றும் நிகிதா ரெட்டி இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இசையமைப்பாளராக மஹதி ஸ்வர சாகர் மற்றும் ஒளிப்பதிவாளராக ஹரி கே வேதாந்த் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கை மோகன் ராஜா இயக்க, நாயகனாக பிரசாந்த் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago