சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சிம்புவை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கரோனா ஊரடங்கு சமயத்தில்கூட பிஸியாக இருந்த இயக்குநர் என்றால் அவர் சுசீந்திரன்தான். ஜெய் நடிப்பில் புதிய படமொன்றை இயக்கி முடித்துள்ளார். குறைந்த அளவுக்குப் படக்குழுவினரை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தப் படத்தையும் முடித்துவிட்டார். இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் ஜெய் நாயகனாக நடிக்கும் புதிய படமொன்றை இயக்கி வருகிறார் சுசீந்திரன். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் ஆதி நாயகனாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை முடித்துவிட்டு, சிம்பு நாயகனாக நடிக்கும் படமொன்றை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் சுசீந்திரன். இவர் சொன்ன கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்துவிடவே, அவரும் பண்ணலாம் என்று தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை கண்டிப்பாக அடுத்தகட்டத்துக்கு நகரும் என்கிறார்கள்.
'மாநாடு' படத்தை முடித்துவிட்டு, சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில்தான் சிம்பு நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். ஏனென்றால், முழுக்க கிராமத்துப் பின்னணியில் நடக்கும் கதையாம். ஹீரோயிசம், காதல், காமெடி என ஜனரஞ்சமான கதைக்களம் என்பதால், இதில் நடித்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளார் சிம்பு.
சிம்புவுடன் நடிக்கவுள்ளவர்கள், சம்பளம், படத்தின் பட்ஜெட் ஆகியவை திட்டமிடப்பட்டு அனைத்தும் சரியாக அமையும் பட்சத்தில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago