ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'பேச்சிலர்' படத்தில் கவுரவத் தோற்றத்தில் மிஷ்கின் நடித்துள்ளார்.
சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ், லிஜோ மோல் ஜோஸ், காஷ்மீரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார் ஜி.வி.பிரகாஷ். 'பேச்சிலர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் நாயகியாக திவ்ய பாரதி நடித்து வருகிறார்.
நாயகனாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார். கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது.
» கமல் - லோகேஷ் கனகராஜ் படத் தலைப்பு விவகாரம்: படக்குழு மறுப்பு
» ஆபாச நடிகை என்ற கங்கணாவின் விமர்சனம்: நடிகை ஊர்மிளாவுக்குக் குவியும் பிரபலங்களின் ஆதரவு
தற்போது தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளித்திருப்பதால், சென்னையில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி வருகிறது படக்குழு. இதில் இயக்குநர் மிஷ்கின் ஒரு முக்கிய கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்துள்ளார். இவருடைய காட்சிகளை 4 நாட்கள் படமாக்கியுள்ளது படக்குழு.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தை 'ராட்சசன்' தயாரிப்பாளர் தில்லி பாபு தயாரித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago