அக்ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய டிஜிட்டல் தளத்தில், புதிய தயாரிப்புகள் மூலம் முன்னிலையில் இருக்கும் நிறுவனம் ட்ரெண்ட் லவுட். தற்போது இந்நிறுவனம், படங்கள் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. ராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்ஷரா ஹாசன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல பாடகி உஷா உதுப், அக்ஷரா ஹாசனுக்குப் பாட்டியாக நடித்துள்ளார்.
இவர்களுடன் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஷ்ரேயா தேவ் ட்யூப், எடிட்டராக கீர்த்தனா முரளி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
பெயரிடப்படாமல் இருந்த இந்தப் படத்துக்கு 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' என்று பெயரிட்டுள்ளது படக்குழு. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
» பாரதிராஜாவின் பேட்டிக்கு திரையரங்க உரிமையாளர்கள் பதிலடி
» 'மிஸ்டர் பீன்' ஆரம்பித்து 30 வருடங்கள்: நடிகர் ரோவன் அட்கின்ஸன் நினைவுப் பகிர்வு
இந்தப் படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ராஜா ராமமூர்த்தி கூறியிருப்பதாவது:
"சமூகத்தைப் பொறுத்தவரை அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நான்கு பண்புகளும் ஒவ்வொரு நல்ல பெண்ணும் கொண்டிருக்க வேண்டிய தகுதிகளாகக் கருதப்படுகின்றன. எங்கள் படம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் தலைப்பின் வழியே ஒரு பெண்ணை எது நல்லவள் ஆக்குகிறது எனும் கேள்வியை ஒரு பெண்ணின் பார்வையில் கேட்கிறது. இதைத்தாண்டி கதைக்களம் பற்றி அதிகம் கூற விரும்பவில்லை. ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்க்கும்போது அறிந்துகொண்டால்தான் அது சுவாரஸ்யமாக இருக்கும்".
இவ்வாறு இயக்குநர் ராஜா ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
22 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago