தெலுங்கு சீரியல் நடிகை தற்கொலை வழக்கு: இருவர் கைது; பிரபல தயாரிப்பாளருக்கு போலீஸ் வலை

By ஐஏஎன்எஸ்

மனசு மமதா, மவுனராகம் உள்ளிட்ட பல தெலுங்கு சின்னதிரை தொடர்களில் நடித்தவர் ஷ்ராவனி. கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஹைதரபாத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

குளிப்பதற்காக தனது அறைக்குச் சென்ற ஷ்ராவனி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது பெற்றோர் அறையின் கதையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஷ்ராவனி இறந்து கிடந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

ஷ்ராவனி டிக் டாக்கில் ஒருவருடன் பழகியதாகவும், அவர், ஷ்ராவனியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து காக்கிநாடாவைச் சேர்ந்த சன்னி என்கிற தேவராஜ் ரெட்டி என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் பேரில் சாய் கிருஷ்ணா ரெட்டி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி தேவராஜ் ரெட்டி, சாய் கிருஷ்ணா ரெட்டி மற்றும் ’RX 100’ படத் தயாரிப்பாளர் அசோக் ரெட்டி ஆகிய மூவரும் ஷ்ராவனியின் மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்ததாகவும், மூவரும் அவரை மிகவும் நச்சரித்துத் துன்பறுத்தியதாலேயே ஷ்ராவனி தற்கொலை செய்து கொண்டார் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாகியுள்ள அசோக் ரெட்டியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மூவரும் ஷ்ராவனியிடம் தங்களைத் திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தியதால் ஷ்ராவனி கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE