திடீரென குழப்பம் என்னைச் சூழ்ந்துவிட்டது: கங்கணா ட்வீட்

By ஐஏஎன்எஸ்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து வாரிசு அரசியலால்தான் அவர் இந்த நிலைக்கு ஆளானார் என கங்கணா ரணாவத் அதிரடியாகக் குற்றம்சாட்டினார். பல்வேறு பாலிவுட் பிரபலங்களுடன் நேரடியாகக் கருத்து மோதலில் ஈடுபட்டார். தொடர்ந்து மும்பை காவல்துறை, மகாராஷ்டிர மாநிலம், ஆளும் சிவசேனா கட்சி என அனைத்துத் தரப்பையும் கங்கணா அடுத்தடுத்து எதிர்க்க ஆரம்பித்தார்.

பாலிவுட்டில் போதை மருந்து மாஃபியா இருக்கிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். சில நாட்களுக்கு முன்பு கங்கணாவின் மும்பை அலுவலகக் கட்டிடத்தின் ஒரு பகுதி, விதிமுறை மீறிக் கட்டப்பட்டதாக இடிக்கப்பட்டது இந்த சர்ச்சையை இன்னும் பெரிதாக்கியது. இதனால் வாரிசு நடிகர்கள்- கங்கணா மோதலாகத் தொடங்கிய இந்த விவகாரம் தற்போது சிவசேனா- கங்கணா மோதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் திடீர் குழப்பம் தன்னைச் சூழ்ந்துள்ளதாக கங்கணா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

''இந்தக் குழப்பத்தில் என்னை மூழ்கடிக்கும் சக்திவாய்ந்த இடைவெளிகள் உள்ளன. நான் எங்கே இருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. வாழ்க்கை என் மீது தூக்கியெறிந்தவற்றைப் பிடித்து அவற்றை இன்னும் அதிகமாகக் கேட்கிறேன், என்னுடைய ஒவ்வொரு துளியையும் கொடுக்கிறேன். ஆனால், அது என்னிடமிருந்து இன்னும் அதிகமாகக் கேட்கிறது. திடீரென குழப்பம் என்னை மீண்டும் சூழ்ந்து கொள்கிறது''.

இவ்வாறு கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

52 mins ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்