‘போதைக்கு அடிமையாக இருந்தேன்’ - இணையத்தில் வைரலாகும் கங்கணாவின் பழைய காணொலி

By ஐஏஎன்எஸ்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து வாரிசு அரசியலால் தான் அவர் இந்த நிலைக்கு ஆளானார் என கங்கணா ரணாவத் அதிரடியாகக் குற்றம்சாட்டினார். பல்வேறு பாலிவுட் பிரபலங்களுடன் நேரடியாக கருத்து மோதலில் ஈடுபட்டார். தொடர்ந்து மும்பை காவல்துறை, மகாராஷ்டிர மாநிலம், ஆளும் சிவசேனா கட்சி என அனைத்து தரப்பையும் கங்கணா அடுத்தடுத்து எதிர்க்க ஆரம்பித்தார்.

அதனை தொடர்ந்து பாலிவுட்டில் போதை மருந்து மாஃபியா இருக்கிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். இந்த விவகாரம் பெரிதாக வெடித்து சுஷாந்த்தின் காதலி ரியா, ரியாவின் சகோதரர் உள்ளிட்ட பலர் கைது வரை சென்றது.

இந்நிலையில் தான் போதைக்கு அடிமையானதாக பேசி கடந்த மார்ச் மாதம் கங்கணா வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் கங்கணா பேசியிருப்பதாவது:

நான் என்னுடைய வீட்டை விட்டு ஓடிப் போன ஓரிரு வருடங்களிலேயே நான் ஒரு நடிகையாகவும், போதைக்கு அடிமையாகவும் ஆனேன். எத்தனையோ விசயங்கள் என் வாழ்வில் நடந்துள்ளன. அது போன்ற நபர்களின் கைகளில் நான் சிக்கினேன். அப்போது தான் என் வாழ்வில் எல்லா ஆபத்தான விஷயங்களும் நடந்தன.

இவ்வாறு அந்த வீடியோவில் கங்கணா பேசியிருந்தார்.

இந்த வீடியோவை கங்கணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த மார்ச் அன்று பதிவிட்டுள்ளார். தற்போது போதைப் பொருள் விவகாரத்தை அவர் கையிலெடுத்துள்ள நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போதைக்கு அடிமையான நீங்கள் போதைப் போருளுக்கு எதிராக பேசலாமா என்று தரப்பினரும், கங்கணாவைப் போல எத்தனை பேர் தைரியமாக தன்னுடைய தவறை ஒப்புக்கொள்ள இயலும் என்று இன்னொரு தரப்பினரும் தர்க்கம் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

மேலும்