தமிழில் ரீமேக் செய்யப்படும் ‘தியா’

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கன்னட மொழியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘தியா’. கே.எஸ். அசோகா இயக்கிய இப்படத்தில் பிருத்வி அம்பார், குஷி, தீக்‌ஷித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். வணிக ரீதியாகவும், வசூல ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே ‘தியா’ ரீமேக் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வந்து கொண்டிருந்தாலும் தற்போது இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. கலையரசன், அஞ்சலி நடிப்பில் வெளியான ‘குதிரைவால்’ படத்தை இயக்கிய மனோஜ் லியோனல் ஜாசன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘தியா’ தயாரிப்பாளர் கிருஷ்ண சைதன்யா ‘தியா’ படத்தின் ரீமேக் உரிமையை பல்வேறு மொழிகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள் கேட்டு வருவதாகவும், அது குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லையென்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்