உடல்நலக் குறைவால் நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார். அவருக்கு வயது 42.
சின்னதிரையில் மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேலு மாதிரியே கெட்டப் போட்டு காமெடி செய்வதால் 'வடிவேல்' பாலாஜி என்று அழைக்கப்பட்டார்.
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான காமெடி நிகழ்ச்சிகளான 'அது இது எது', 'கலக்கப் போவது யாரு', 'கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ்' உள்ளிட்ட பல நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளார். 'தலைநகரம்' வடிவேலு மாதிரி கெட்டப் போட்டு, இவர் செய்த காமெடி சின்னத்திரையில் மிகவும் பிரபலம்.
சின்னத்திரையில் பிரபலமானதைத் தொடர்ந்து, சில படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கரோனா ஊரடங்கு சமயத்தில் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியும் அளித்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டதால், சில நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பில் கூட பங்கேற்றார் வடிவேல் பாலாஜி.
சுமார் 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய கை, கால்களும் செயல் இழந்தது. இதனிடையே போதிய பண வசதி இல்லாத காரணத்தால், அவரை அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று (செப்டம்பர் 10) காலை காலமானார். அவருக்கு வயது 42. அவருக்கு 1 மகனும், மகளும் இருக்கிறார்கள். வடிவேல் பாலாஜியின் திடீர் மறைவு சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
55 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago