உடற்பயிற்சி நிபுணருக்கு விலை உயர்ந்த காரைப் பரிசளித்த பிரபாஸ்

By செய்திப்பிரிவு

'பாகுபலி' படத்தில் தன் உடலமைப்பு மாற்றத்துக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்த உடற்பயிற்சி நிபுணருக்கு விலை உயர்ந்த காரைப் பரிசளித்துள்ளார் பிரபாஸ்.

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. இரண்டு பாகங்களாக வெளியான இந்தப் படம் உலக அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்துக்குப் பின் உலக அளவில் பிரபலமான நடிகராக வலம் வருகிறார் பிரபாஸ். அந்தப் படத்துக்குப் பின் பிரபாஸ் நடிப்பில் 'சாஹோ' தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. தற்போது தயாரிப்பில் இருக்கும் 'ராதே ஷ்யாம்', 'ஆதிபுருஷ்' மற்றும் நாக் அஸ்வின் இயக்கவுள்ள படம் ஆகிய அனைத்துப் படங்களுமே தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளன.

பிரபாஸுக்கு கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக உடற்பயிற்சி நிபுணராக இருந்து வருகிறார் லட்சுமண் ரெட்டி. பிரபாஸ் நடிக்கவுள்ள படங்களின் உடலமைப்பு மாற்றத்துக்காக அவர் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். மேலும், இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வருகிறார்கள்.

தற்போது தன் நட்புக்குப் பரிசாக லட்சுமண் ரெட்டிக்கு விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் காரைப் பரிசாக அளித்திருக்கிறார் பிரபாஸ். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

சினிமா

31 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்