டிக் டாக்கில் சந்தித்த நபர் துன்புறுத்தல்: தெலுங்கு சின்னத்திரை நடிகை தற்கொலை

By செய்திப்பிரிவு

தெலுங்கு சின்னத்திரை நடிகை ஷ்ராவனி நேற்று நள்ளிரவு தற்கொலை செய்துகொண்டார்.

மனசு மமதா, மவுனராகம் உள்ளிட்ட பல தெலுங்கு சின்னத்திரை தொடர்களில் நடித்திருப்பவர் ஷ்ராவனி. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (நேற்று) வீட்டில், தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார்.

ஷ்ரவானி டிக் டாக்கில் ஒருவருடன் பழகி நட்பாகினார். அவர், ஷ்ராவனியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்தார் என்று ஷ்ராவனியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

காக்கிநாடாவைச் சேர்ந்த சன்னி என்கிற தேவராஜ் ரெட்டியுடன் டிக் டாக் மூலமாகப் பழகி ஷ்ராவனி நட்பானார். பின் இருவரும் நேரில் சந்தித்து நெருக்கமாகியுள்ளனர். சன்னி, தனக்கு பெற்றோர் இல்லை என்று கூறி ஷ்ராவனியின் அனுதாபத்தைப் பெற்றிருக்கிறார்.

ஆனால், கடந்த சில மாதங்களாகவே சன்னி, ஷ்ராவனியைத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தாங்க முடியாமல் ஷ்ராவனி இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறியிருக்கும் அவரது பெற்றோர், சன்னிக்கு எதிராக எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஷ்ராவனியின் சகோதரர் சிவாவும், தனது சகோதரியின் மரணத்துக்குக் காரணமான சன்னி, கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

காவல்துறையினர் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE