மக்கள் தான் முடிவு செய்யும் இடத்தில் இருக்கிறார்கள்: துல்கர் சல்மான்

மக்கள் தான் முடிவு செய்யும் இடத்தில் இருக்கிறார்கள் என்று ஓடிடி தளங்கள் படங்கள் வெளியீடு தொடர்பாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் அனைத்தும் 150 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. புதிய படங்கள் எதுவும் வெளியாகாததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னணி நடிகர்களுடைய பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஓடிடி தளத்தில் படங்கள் வெளியிடப்பட்டு வருவதால், இந்திய அளவில் உள்ள மல்டிப்ளக்ஸ் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தங்களுடைய கடும் அதிருப்தியைப் பதிவு செய்து வருகிறார்கள். இதனிடையே, தற்போதுள்ள சூழல், நடித்து வரும் படங்கள் தொடர்பாக துல்கர் சல்மான் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார்.

அதில் ஓடிடி தளங்களில் படங்கள் வெளியிடப்பட்டு வருவது குறித்தும், ஓடிடிக்கு என்றே தனியாக மலையாள படங்கள் தயாரிப்பு தொடர்பாக துல்கர் சல்மான் கூறியிருப்பதாவது:

"அது இன்னும் முறையாக நடக்கும். நான் நடிக்கும் 'கூரூப்' என்கிற படம் பெரிய திரைக்கானது. ஓடிடியில் வெளியிட முடியாது. ஒரு கூட்டம் அதைப் பார்த்து ரசிக்க வேண்டும். அதே நேரம். நாங்கள் அனைவரும் தொடர்ந்து வேலை செய்ய விரும்புகிறோம். மக்கள் இணையத்தில் மூலமாக மட்டும் தான் திரைப்படங்கள் பார்க்கிறார்கள் என்றால் ஓடிடிக்கான படம் எடுப்போம். இதில் மக்கள் தான் முடிவு செய்யும் இடத்தில் இருக்கிறார்கள்"

இவ்வாறு துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE