தயாரிப்பில் புதிய ஆந்தாலஜி படம்: 5 முன்னணி இயக்குநர்கள் கூட்டணி

By செய்திப்பிரிவு

5 முன்னணி இயக்குநர்கள் கூட்டணியில் புதிய ஆந்தாலஜி திரைப்படம் ஒன்று தயாரிப்பில் இருக்கிறது.

கரோனா காலத்தில் தமிழ்த் திரையுலகில் இப்போது பல இயக்குநர்கள் ஒன்றிணைந்து பணிபுரிந்து வருகிறார்கள். ஆந்தாலஜி பாணியில் முன்னணி இயக்குநர்கள் 30 நிமிடங்கள் வரக்கூடிய அளவில் கதையொன்றை உருவாக்கி, படமாக்கி வருகிறார்கள்.

அவ்வாறு காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள 'குட்டி லவ் ஸ்டோரி' ஆந்தாலஜி படத்தை கெளதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர்.

இது தவிர்த்து இன்னொரு ஆந்தாலஜி பாணியிலான திரைப்படம் தயாரிப்பில் இருக்கிறது. இந்தப் படத்தை வெங்கட் பிரபு தயாரித்து வருகிறார். த்ரில்லர் பாணியிலான இந்த ஆந்தாலஜி படத்தை கெளதம் மேனன், வெங்கட் பிரபு, ராஜேஷ், சிம்பு தேவன் மற்றும் பா.இரஞ்சித் ஆகிய 5 இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர்.

ஐவரின் படமும் தலா 30 நிமிடங்கள் வரும். இதில் சில இயக்குநர்கள் தங்களுடைய பகுதியைப் படமாக்கி முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். படம் தொடர்பான அனைவரது பணிகளும் முடிந்தவுடன், அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்