பேட்மேனாக நடிக்கும் ராபர்ட் பேட்டின்ஸனுக்கு கரோனா தொற்று - படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

By செய்திப்பிரிவு

மேட் ரீவ்ஸ் இயக்கும் புதிய ‘பேட்மேன்’ படத்தில் ராபர்ட் பேட்டின்ஸன் நடித்து வருகிறார். கரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு சமீபத்தில் மீண்டும் தொடங்கியது. தற்போது இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் ‘தி பேட்மேன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன் நகரில் நடைபெற்றது.

இந்நிலையில் பேட்மேனாக நடிக்கும் ராபர்ட் பேட்டின்ஸனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ‘தி பேட்மேன்’ படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வார்னர் ப்ரதர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

‘தி பேட்மேன்’ படக்குழுவில் உள்ள ஒரு உறுப்பினருக்கு கோவிட்- 19 உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அந்த நபர் ராபர்ட் பேட்டின்ஸன் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதுமுள்ள பலரும் சமூக வலைதளங்களில் ராபர்ட் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்