மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ராணா நடிக்கவுள்ளார்.
சித்தார்த் நடித்த 'அவள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மிலந்த் ராவ். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா நடித்து வரும் 'நெற்றிக்கண்' படத்தை மிலந்த் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டுள்ளது. விரைவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. இதனை விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு ராணா நடிக்கவுள்ள படத்தை இயக்க மிலந்த் ராவ் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் அச்சன்டா கோபிநாத் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். த்ரில்லர் பாணியிலான கதையொன்றை அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் எழுதியுள்ளார் மிலந்த் ராவ்.
ராணா படம் தவிர்த்து, 'அவள் 2' வேறு இயக்கவுள்ளார் மிலந்த் ராவ். இது தொடர்பான அறிவிப்பு 'அவள்' படத்துக்குக் கிடைத்த வரவேற்புக்குப் பின் அறிவிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago