க்ரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து வரும் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
அரசியலில் கவனம் செலுத்தத் திரையுலகிலிருந்து விலகினார் பவன் கல்யாண். ஆனால், அரசியலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். தொடர்ச்சியாக அரசியலிலும் தனது ஜனசேனா கட்சியை வலுப்படுத்தி வருகிறார்.
அவர் மீண்டும் திரையுலகிற்குத் திரும்பியுள்ள படத்தை ஸ்ரீராம் வேணு இயக்கியுள்ளார். இது இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் தெலுங்கு ரீமேக்காகும். இந்தப் படத்தை போனி கபூர் மற்றும் தில் ராஜு இணைந்து தயாரித்துள்ளனர். 'வக்கீல் சாப்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று (செப்டம்பர் 2) பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
இதனை பவன் கல்யாண் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் 27-வது படத்தை க்ரிஷ் இயக்கி வருகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தின் முன்னோட்டம் இன்று (செப்டம்பர் 2) வெளியிடப்பட்டது.
இதனைப் பகிர்ந்து க்ரிஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"பதினைந்து நாட்களும் படப்பிடிப்புக் குழு அனைவருக்கும் அழகான நினைவுகளாக நகர்ந்துள்ளன. நிலையான வெற்றி கண் முன் தெரிகிறது. இதற்குக் காரணம் நீங்களே, உங்கள் ஊக்கமும், உங்கள் கனிவுமே. எப்போதும் இது போலவே கோடிக்கணக்கான மக்களின் வாழ்த்துகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்".
இவ்வாறு இயக்குநர் க்ரிஷ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago