ராமாயணத்தை அடுத்து ‘சீதாயணம்’: இந்தி திரைப்படம் பல கோடி செலவில் தயாரிக்க திட்டம்

By செய்திப்பிரிவு

தூர்தர்ஷனில் தொலைக்காட்சி தொடராக வெளியானதை அடுத்துராமாயணம் அதிகப் பிரபலமானது. தொடர்ந்து அயோத்தியில்ராமர் கோயில் கட்டும் போராட்டத்தாலும் ராமரின் முக்கியத்துவம் தேசிய அளவில் தொடர்ந்தது.

தற்போது உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கால், அயோத்தி நிலப்பிரச்சினை முடிவாகி அங்கு கோயில் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி தொடராக..

இந்நிலையில், ராமாயணம் போல், சீதாயணம் எனும் பெயரில்ஒரு காவியத்தை எழுதி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடராக உருவாக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இதன் பின்னணியில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவின் ஒரு இளம் தலைவர் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. சமீபத்தில் இவருக்கு மத்திய அரசு திரைப்படத் துறையில் தேசிய அளவிலான ஒரு முக்கியப் பதவியையும் அளித்து கவுரவித்துள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உத்தரபிரதேச பாஜக நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, "ராமர் அளவுக்கு சீதா புகழடையவில்லை என்றாலும் அவரது மதிப்பும் குறைந்ததல்ல. இவரது இளமைக் காலம்முதலான வாழ்க்கை வரலாற்றை திரைக்காவியமாக தயாரிப்பவர்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடமும் ஆலோசிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். சீதாயணத்தை பாலிவுட்டின் திரைப்படமாக்க எங்கள் அரசு முழு உதவி செய்யும்" என்றனர்.

முதல்கட்டமாக இந்தியில்..

முதல்கட்டமாக இந்தியில் தயா ராகும் சீதாயணத்தில் பாலிவுட் நட்சத்திரங்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதன் பிறகு தமிழ் உள்ளிட்ட பல உலக மொழிகளிலும் இத் திரைப்படம் உருவாக்கப்பட உள்ளது.

சீதை பிறந்ததாகக் கருதப் படும் தற்போதைய நேபாளத்தின் ஜனக்புரியிலும் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE