'தி சேஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன் நடித்துள்ள படத்துக்கு 'தி சேஸ்' எனப் பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

ரெஜினா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'சூர்ப்பனகை' படத்தை இயக்கி வந்தார் கார்த்திக் ராஜு. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டது.

கரோனா ஊரடங்கு காலத்தில் குறைந்த பேர் கொண்ட படக்குழுவினருடன் படமாக்கும் விதத்தில் கதையொன்றை எழுதினார் கார்த்திக் ராஜு. இதில் ரைசா வில்சன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், பேபி மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படமும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ளது.

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டுத் திரும்பியுள்ளது படக்குழு. படப்பிடிப்புக்கு முன்பும், பின்பும் படக்குழுவினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தற்போது இந்தப் படத்துக்கு 'தி சேஸ்' என்று பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். இதற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், சண்டை இயக்குநராக திலீப் சுப்பராயன், இசையமைப்பாளராக சாம் சி.எஸ்., எடிட்டராக் சாபு ஜோசப் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். 'சூர்ப்பனகை' படத்தின் தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மா இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார்.

இது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோருக்கு இடையே ஒரே இரவில் நடைபெறும் கதையாகும். தமிழ், தெலுங்கு மட்டுமன்றி மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்