சிக்கலானதை எளிதாக்குங்கள்:  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நடத்திய  உரையாடல்

By செய்திப்பிரிவு

மன அழுத்தம், பதட்டம் மற்றும் நிச்சயமற்ற தன்மை நிறைந்த இந்த முன்னோடியில்லாத காலங்களில், தி ஆர்ட் ஆஃப் லிவிங்குடன் இணைந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி , தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பார்வையாளர்களுக்கும் அமைதி, ஞானம் மற்றும் நேர்மறை கருத்துக்களை எடுத்து வர முனைந்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, சிந்தனையைத் தூண்டும் வகையான இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வணிகத் தலைவர் அனுப் சந்திரசேகர் இருவரும் சமீபத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்தினர்.

இதில், மன ஆரோக்கியம், தனிமைப்படுத்தல், கடுமையான உறவுகள், அமைதியற்ற மற்றும் ஆர்வமுள்ள மனதைக் கையாள வழிகள் மற்றும் நுட்பங்கள் போன்ற பல விஷயங்களைப் பற்றி ஆழ்ந்த அர்த்தமுள்ள நுண்ணறிவு செய்திகளை வழங்குவதன் மூலம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பார்வையாளர்களின் மனங்களைக் கவர்கிறார். அந்த அறிவூட்டும் உரையாடலின் சில பகுதிகள் இதோ:

அனுப் சந்திரசேகர்: வீட்டிலிருந்து வேலை செய்வது புதிய விதிமுறையாகிவிட்டது. இருப்பினும், வசதிக்காக என்று ஏற்படுத்தப் பட்ட இந்த வேலை நிலைமை மன அழுத்தத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண் தொழில் வல்லுநர்களுக்கு, ஒரே இடத்தில் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது ஒரு சவாலாக அமைந்திருக்கிறது . இந்த காலங்களில் நம் உடலையும் மனதையும் எவ்வாறு அமைதியாக வைத்திருப்பது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சற்று முந்தைய காலத்தில் , சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு உலகைப் பற்றி சிந்தியுங்கள். நவீனத் தொழில்நுட்பத்திற்கான அணுகல் எதுவும் இல்லை, நம்மிடம் இணைய இணைப்புகள் இல்லை. அப்போதுதான் தொலைக்காட்சி வீடுகளில் புகத் துவங்கியிருந்தது. பிழைப்பதற்காக நாம் வேலைக்கு வெளியே கண்டிப்பாகச் செல்ல வேண்டியிருந்தது. அது போன்ற ஒரு காலத்தில் கோவிட் நம்மைத் தாக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று இப்போது கற்பனை செய்து பாருங்கள் . நாம் மிகுந்த பதட்டத்துடனும் அழுத்தமான மனநிலையிலும் இருந்திருப்போம். எனவே இன்றைய சூழ்நிலையில் நேர்மறையான கண்ணோட்டம் என்னவென்றால், தொழில்நுட்பத்தின் வரம் நம் வாழ்க்கையை மிகவும் பாதுகாப்பானதாகவும் எளிதாகவும் ஆக்கியிருக்கிறது. இந்த நிலைமையை ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் மூன்றாம் உலகப் போர் என்று கருதிப் பாருங்கள். நமது தனிப்பட்ட சவால்களின் தீவிரத்தை புரிந்துகொள்வதிலும் பகுப்பாய்வு செய்வதிலும் நம்முடைய எல்லா சக்தியையும் நாம் திசை திருப்ப வேண்டும். இந்த நிச்சயமற்ற நிலைமை தற்காலிகமானது என்று நாம் உறுதியாக நம்ப வேண்டும்; நாம் பொறுமையாக இருக்க வேண்டும் மற்றும் நேர்மறைகளை மட்டுமே பார்க்க வேண்டும். நீண்ட காலத்திற்குப் பிறகு, குடும்பமாக வீட்டில் அதிக நேரம் செலவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இது முன்பு அரிதாக இருந்தது. ஆளுமைகள் மோதுவது இயல்பானது, நாம் திறந்த மனதுடன் ஒருவருக்கொருவர் தேவைகளுக்கு இடமளிக்க வேண்டும். நமது சகிப்புத்தன்மை அளவு அதிகரிக்க வேண்டும். நமது படைப்பு தூண்டுதல்கள் உயர்த்தப்பட வேண்டும். இந்த சவாலான காலத்தை வெல்ல நமக்குப் பொறுமையையும் தகுந்த மனநிலையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தியானம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் நம் மனதில் கவனம் செலுத்துங்கள். இது நாம் தேடும் அமைதியைத் தந்து மனதைப் பலப்படுத்தும்.

அனுப் சந்திரசேகர்: இந்த காலங்களில் குடும்பத்துடன் இருப்பது நமது பாதுகாப்பின்மை மற்றும் எதிர்காலம், பணி மற்றும் பொதுவாக வாழ்க்கை குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்கள் என்ன குருதேவ்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இந்த நிச்சயமற்ற காலங்களில் நாம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பதட்டத்தை வெல்ல இது உதவும். கோவிட் தொற்றுக்கு முன்பே, நிச்சயமற்ற தன்மையும் பதட்டமும் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தன. பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் சுற்றுலா மற்றும் பயணத் துறையைச் சேர்ந்தவர்களை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் இப்போது மிகவும் சவாலான நேரத்தை எதிர் கொள்கின்றனர். இந்த தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பிரிவினர் ஒழுங்கமைக்கப்படாத துறையைச் சேர்ந்த நமது அன்றாட கூலித் தொழிலாளர்கள்.

இருப்பினும், மக்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உதவுவதற்கான வாய்ப்பை கோவிட் வழங்கியுள்ளது. பல அமைப்புகளும் பொதுவாக சமூகமும் தேவைப்படுபவர்களுக்குச் சரியான நேரத்தில் ஆதரவை வழங்க முன்வந்துள்ளன. ஒருவருக்கொருவர் உதவுவதற்கும் ஆதரவாக இருப்பதற்கும் இது ஒரு அருமையான வாய்ப்பு.

அனுப் சந்திரசேகர்: தற்போதைய சூழ்நிலையில் நமது லட்சியங்கள் பின் தங்கி விட்ட நிலையை அடைந்துள்ளன. பழமைவாத வாழ்க்கையை வழிநடத்துவதற்கான ஒரு விருப்பம் ஊடுருவி வருகிறது, விவசாயத்தைத் தொடரும் ஒரு எளிய வாழ்க்கைக்காக மக்கள் போட்டி மிகுந்த பந்தய வாழ்க்கையை விட்டு விலகி வெளியேறத் தயாராக உள்ளனர். இது சரியான சிந்தனையா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு இது ஒரு நல்ல திசை. ஆனால், இதை ஒரு பெரிய வாய்ப்பாக அனைவரும் பார்க்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு நெருக்கடியும் தன்னிறைவை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகும். இது நம் தேசத்தின் வளர்ச்சிக்கு உதவும். அதிக லட்சியங்களுடன் இருப்பதற்கும், எந்த லட்சியமும் இல்லாமல் இருப்பதற்கும் இடையிலான சமநிலையைப் புரிந்துகொள்வதற்கான முக்கியமான நேரம் இது. நிச்சயமற்ற இந்த நேரத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதைப் பற்றிக் கொள்ளுங்கள்.

அனுப் சந்திரசேகர்: ஏராளமான எதிர்மறை உணர்ச்சிகளும் செய்திகளும் நம்மைச் சுற்றிப் பரவி வருகின்றன. இந்த எண்ணங்களை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பத்திரிகைக்குப் பெரிய பொறுப்புகள் உள்ளன. உண்மைகளை மட்டுமே வெளியிடவேண்டும் என்பது முதல் மற்றும் முக்கியமான பொறுப்பு . நம்பிக்கையை மீண்டும் தூண்டி விடும் அவர்களின் இரண்டாவது பொறுப்பு நடைமுறைக்கு வரும்போது - அதுவே சில நேரங்களில் அது சற்று துன்பகரமானதாக இருக்கலாம், உத்வேகம் தரும், மென்மையான கதைகளை மேலும் வெளியிடவேண்டும். இது நம் சமூகத்தில் நம்பிக்கையைப் பலப்படுத்தும். எதிர்மறை மற்றும் நேர்மறையான செய்திகளைச் சமப்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அனுப் சந்திரசேகர்: கோவிட் தொற்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டதாக உணரும் சூழ்நிலையில் பலரைத் தள்ளியுள்ளது. வயதானவர்கள் தங்களது நெருங்கிய உறவுகளிடம் இருந்து சரியான நேரத்தில் ஆதரவைப் பெற முடியாத கதைகளை நாம் கேட்கிறோம். இது நல்ல நண்பர் மற்றும் எதிரி யார் என்பதைப் பற்றி சிந்திக்க வைத்தது. இதைக் குறித்த தங்களது எண்ணங்கள் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: மக்கள் தனிமையை உணர்ந்த ஒரே நேரம் கோவிட் தொற்றுக் காலம் அல்ல. நம் அன்றாட வாழ்க்கையில் குடும்ப உறுப்பினர்கள் பலர் வெளி நாடுகளில் வாழ்கிறார்கள், சரியான நேரத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க முடியாத பல சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. ஆனால் நம் அனைவரையும் பார்க்கும் ஒரு சக்தியை அனைவரும் நம்ப வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அது நம்மை வழிநடத்தும் மற்றும் பாதுகாக்கும். இது ஆன்மீகத்தால் தூண்டப்பட்ட ஒரு உணர்வு. இந்த சக்தியில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும். இது நமக்கு உளவியல் வலிமையைத் தரும்.

உலகம் முழுவதும் மனச்சோர்வு விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆசிரியர்கள் மத்தியில், மனச்சோர்வு விகிதம் ஆபத்தான அளவில் உள்ளது. இந்த சூழ்நிலையை தியானம், சுவாச நுட்பங்கள் மூலம் கையாளலாம்.இவை அமைதியான வாழ்க்கை வாழ உதவும் . "

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11:00 மணிக்கு, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் “எளிமைப்படுத்தப்பட்ட சிந்தனைகள்” என்னும் நிகழ்ச்சியில் இணைந்திடுங்கள். அதில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்களுடன் வாழ்க்கை குறித்து உண்மையான உரையாடலில் ஈடுபடுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்