விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகும் தேங்க் யூ

By செய்திப்பிரிவு

விக்ரம் குமார் இயக்கத்தில் நாக சைத்தன்யா நடிக்கவுள்ள படத்துக்கு 'தேங்க் யூ' என்று பெயரிட்டுள்ளது படக்குழு.

'யாவரும் நலம்', 'இஷ்க்', 'மனம்', '24' உள்ளிட்ட வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். கடந்தாண்டு தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான 'கேங் லீடர்' படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

'கேங் லீடர்' படத்துக்குப் பிறகு விக்ரம் குமாரின் அடுத்த படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. ஆனால், அடுத்ததாக நாக சைத்தன்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதை விக்ரம் குமார் பேட்டியொன்றில் உறுதி செய்தார்.

நேற்று (ஆகஸ்ட் 29) நாகார்ஜுன் பிறந்த நாளாகும். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். அதனை முன்னிட்டு அவருடைய மகன் நாக சைத்தன்யாவின் படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தில் ராஜு தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை விக்ரம் குமார் இயக்கவுள்ளார். 'தேங்க் யூ' என்று பெயரிடப்பட்டு இந்தப் படத்தில் நாக சைத்தன்யாவுடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதைப் படக்குழு அறிவிக்கவில்லை. விரைவில் நடிகர்கள் தேர்வை முடித்து, படப்பிடிப்புக்குச் செல்ல ஆயத்தமாகி வருகிறது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்