ஐஎம்டிபி தளத்தில் 'சடக் 2' படத்தின் விசித்திர சாதனை

By செய்திப்பிரிவு

ஐஎம்டிபி இணையதளத்தில் 'சடக் 2' திரைப்படம் ஒரு விசித்திரமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மகேஷ் பட் இயக்கத்தில் சஞ்சய் தத், சித்தார்த் ராய் கபூர், அலியா பட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சடக் 2'. சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. பலரும் வாரிசு நடிகர்கள் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதில் சிக்கியுள்ள முதல் படமாக 'சடக் 2' அமைந்தது.

ஆகஸ்ட் 12-ம் தேதி 'சடக் 2' படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்தியாவில் உருவான படங்களில் அதிகம் பேர் டிஸ்லைக் செய்தது, உலகளவில் அதிகம் பேர் டிஸ்லைக் செய்த 2-வது வீடியோ என்ற சாதனையை நிகழ்த்தியது. ஆகஸ்ட் 28-ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 'சடக் 2' திரைப்படம் வெளியானது.

படம் மிகவும் மோசமாக இருந்ததால், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதனிடையே, படம் தொடர்பான பலரும் வாக்களிக்கும் ஐஎம்டிபி தளத்தில் 'சடக் 2' திரைப்படம் ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளது. 'சடக் 2' படத்தைப் பார்த்துவிட்டு பலரும் ஐஎம்டிபி தளத்தில் வாக்களிக்கத் தொடங்கினார்.

மொத்தமாக 37,899 வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளது. இதில் 95.9% பேர் 1 ஸ்டாரில் வாக்களித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். மேலும், இந்தியாவில் தயாரான படங்களில் ஐஎம்டிபி தளத்தில் மிகவும் குறைந்த ஸ்டார்களை பெற்றுள்ள படம் என்ற விசித்திர சாதனையை 'சடக் 2' நிகழ்த்தியுள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு விமர்சகர் கமால் ஆர் கான் நடித்த 'தேஷ் துரோகி' திரைப்படம் 1.4 ஸ்டார்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்