லாஸ்லியா ஒப்பந்தமாகியுள்ள புதிய படம்

By செய்திப்பிரிவு

'பிக் பாஸ்' லாஸ்லியா ஒப்பந்தமாகியுள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த 'ராட்சசன்' படத்தை தயாரித்து பெரும் வெற்றி கண்ட தயாரிப்பு நிறுவனம் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி. அதனைத் தொடர்ந்து தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'பேச்சிலர்' படத்தை தயாரித்து வருகிறது. மேலும், அசோக் செல்வன் நடித்த 'ஓ மை கடவுளே' படத்தையும் வெளியிட்டு வெற்றி கண்டது.

தற்போது, தங்களுடைய தயாரிப்பில் 10-வது படத்தை அறிவித்துள்ளது ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம். இந்தப் படத்தை ஜே.எம்.ராஜ சரவணன் இயக்கவுள்ளார். இதில் 'பிக் பாஸ்' லாஸ்லியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் நாயகனாக கே.பூர்ணேஷ் அறிமுகமாகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 30) வெளியிடப்பட்டுள்ளது. லாஸ்லியா, பூர்ணேஷ் உடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் கதையாக இந்தப் படம் கதைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகிறது.

கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படப்பிடிப்புக்குச் செல்ல படக்குழு தயாராகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்